(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி (19-12-2019) வரை நீடிக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் இன்று(05) உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நுவரெலியாவில் செயற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் முகதமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களது விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.