(UTV|COLOMBO) – பொருட்களின் வரி குறைக்கப்பட்டாலும் மதுபான மற்றும் சிகரட் வகைகளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய(04) ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“.. பெறுமதி சேர் வரி 8% இனால் குறைக்கப்பட்ட போதிலும் அது மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
குறைக்கப்படும் பெறுமதி சேர் வரியானது மதுபான மற்றும் சிகரட் உற்பத்தி தொடர்பில் அறவீடு செய்யப்படும் உற்பத்தி வரியை அதிகரிப்பதன் மூலம் சமனிலை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி எந்தவொரு வகையிலும் மதுபானங்கள் மற்றும் சிகரட் வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படாது..” என சுட்டிக்காட்டியுள்ளார்.