(UTV|COLOMBO) – ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டினையும் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இன்று(05) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரருக்கு ஆறு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து ஞானசார தேரர் கடந்த மே 23ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. சரவணமுத்து தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு அரசியலமைப்பின் 12(1) சரத்தை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.