(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று(06) காலை 8.00 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரணைமடு குளமான 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.