(UTV|COLOMBO) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலா வாவியின் இரு வான் கதவுகளும், இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இராஜாங்கனை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகாமையில் சென்று புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்க்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.