(UTV|COLOMBO) – நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையுடன் நாட்டின் பல பாகங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு என்பன குறித்த இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் தோன்றுமிடத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.