Trending News

இலங்கைக்கு இதுவரையில் 31 தங்கம்

(UTVNEWS | COLOMBO) – நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை இதுவரை 31 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

அதேநேரம் 57 வெள்ளி மற்றும் 83 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 171 பதக்கங்களுடன் தரப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 214 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் இதுவரை 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 142 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் 23 தங்கம், 30 வெள்ளி, 34 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 87 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Iran’s internet blackout reaches four-day mark

Mohamed Dilsad

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

Mohamed Dilsad

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment