(UTV|COLOMBO) – இலங்;கையில் இருந்து தொழில் வாய்ப்புக்காக 29 நாடுகளுக்குச் சென்றவர்களுள் கடந்த நான்கு ஆண்டுகளில், 1043 பேர் மரணமடைந்துள்ளார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.