(UTV|COLOMBO) – இம்முறை நடைபெறுகின்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ள நிலையில் இறுதி நாளன்று மாணவர்கள் யாரும் பொது சொத்துக்களுக்கோ ஏனையவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.