(UTV|COLOMBO) – நாட்டின் வட பகுதியில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை நாளை தொடக்கம் சற்று குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதோடு, இன்று பிற்பகல் 1 மணிக்கு பின் ஏனைய சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்பதோடு, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.