(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.