(UTVNEWS | COLOMBO) – சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் திட்டமிடப்பட்ட நாடகமென மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அலரிமாளிகையில் இடம் பெற்ற ஆளும் கட்சி குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் நாடகம் என்பதற்கான ஆதரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாவும் தெரிவித்தார்.
எனினும் சுவிஸ் தூதரகம் ஏன் இதனை செய்தது இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை கண்டறியவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.