(UTV|COLOMBO) – சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஏதுவாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரியை சிறியளவில் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஒரு கிலோ கிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.