(UTV|COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(13) கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கவுள்ளார்.
அதேபோல் நேற்று (12) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.