(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வசமுள்ள காலி மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர சபையின் தலைவர் பிரியந்த சஹபந்து தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 14 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 7 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியி் 3 வேட்பாளர்கள் மேற்படி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 6 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.