(UTV|COLOMBO) – மொரகஹஹேன பகுதியில் ரூபா 3 கோடிக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(13) இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெரோயின், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.