(UTV|COLOMBO) – வாழ்க்கைச் செலவுக்கான விடயங்களை காலத்திற்கு காலம் ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் அங்கத்தவர்களாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன ஆகியோரே குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 6 இராஜாங்க அமைச்சர்களும், 12அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் வாழ்க்சைச் செலவு தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து தமது சிபாரிசுகளை இக்குழுவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் என்பதுடன், அதன் அடிப்படையில் அரச தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.