(UTV|COLOMBO) – நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொலிஸ் அதிகாரி உள்பட மூன்று பேர் பலியாகினர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இப்பகுதி அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.