Trending News

அணியில் இருந்து ஜோ ரூட் நீக்கம்

(UTV|COLOMBO) – தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் பெப்ரவரி மாதத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. பேர்ஸ்டோவ், 5. பட்லர், 6. பேட் பிரவுன், 7. சாம் குர்ரான், 8. டாம் குர்ரான், 9. ஜோ டென்லி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. தாவித் மாலன், 12. மேத்யூ பார்கின்சன், 13. அடில் ரஷித், 14. ஜேசன் ராய், 15. பென் ஸ்டோக்ஸ், 16. மார்க் வுட்.

Related posts

Ashes 2017: Australia clinch series victory with another crushing defeat on England to win third Test

Mohamed Dilsad

අලුත් පාර්ලිමේන්තුවේ ආරම්භක දිනයේ වැඩසටහන ගැන පාර්ලිමේන්තු සන්නිවේදන ඒකකයෙන් නිවේදනයක්

Editor O

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

Mohamed Dilsad

Leave a Comment