(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று தினங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுத்தப்படுத்துமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர மக்களைக் கேட்டுள்ளார்