Trending News

உலக அழகி மகுடத்தை சூடினார் டோனி ஆன்சிங் [VIDEO]

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த 23 வயதான டோனி ஆன்சிங் வென்றுள்ளார்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் 69 ஆவது உலக அழகிக்கான போட்டி இடம்பெற்றது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.

இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி- ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

டொனி ஏன் சிங், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் மகளிர் மற்றும் உளவியல் துறைசார் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

Related posts

Manchester attack: Ariana Grande plans benefit gig

Mohamed Dilsad

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி

Mohamed Dilsad

Heat weather advisory for several districts

Mohamed Dilsad

Leave a Comment