(UTV|COLOMBO) – தமிழர் நிலங்கள் கண்முன்னே களவாடப்படுவதாகவும், இந்த நிலங்களைக் காப்பாற்ற இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்கு அழைப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை வர விரும்பாதவர்களை நிர்ப்பந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களை பாதித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.