Trending News

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 14 தொழிலாளர்கள் பலி

(UTV|COLOMBO) – சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதியில் எரிவாயு கசிந்து திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் சுரங்கத்தினுள் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Related posts

Khloe strips naked for Kourtney’s brand

Mohamed Dilsad

Navy nabs 36 persons for engaging in illegal activities

Mohamed Dilsad

Police fired at a van in Tangalle

Mohamed Dilsad

Leave a Comment