Trending News

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

(UTV|COLOMBO) – 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் (WhatsApp) செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் கைப்பேசிகள், 2.3.7 அல்லது அதை விடவும் பழைமையான Android மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் WhatsApp கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் கைப்பேசிகளில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது.

இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Related posts

Tobacco and liquor seized at customs

Mohamed Dilsad

பேதங்கள் எதுவுமின்றி அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

Mohamed Dilsad

Greek wildfire kills at least 20 near Athens

Mohamed Dilsad

Leave a Comment