Trending News

‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது

(UTV|COLOMBO) – ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் ப்ரக்சிட் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது என்ற வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சன், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான அனுமதியை ராணி எலிசபெத்திடம் முறைப்படி பெற்றார்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை ராணி எலிசபெத் வரும் வியாழக்கிழமை தொடங்கி வைத்து புதிய அரசின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது

Mohamed Dilsad

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

Mohamed Dilsad

சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்…

Mohamed Dilsad

Leave a Comment