Trending News

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

(UTV|COLOMBO) – புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. முன்னோக்கி செல்ல வேண்டும். அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளன.
அதற்கமைய ஜனவரி மாதம் முதல் நாங்கள் முன்னோக்கி செல்வோம். நான் இங்கு எந்த நாளும் இருக்க போவதில்லை. புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதே எனக்கு தற்போது காணப்படும் பொறுப்பு.

சஜித் பிரேதமதாச உள்ளிட்ட ஏனையவர்கள் பாராளுமன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

Mohamed Dilsad

President will address the nation today

Mohamed Dilsad

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment