(UTV|COLOMBO) – ஆட்சிபீடமேறிய புதிய அரசாங்கம் பெரும்பான்மைப்பலம் இல்லாத வேளையில் ஒரு மாதகாலத்திற்குள்ளாகவே இவ்வாறு செயற்படுகின்றதெனின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டால் எத்தகைய நிலையேற்படும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கேள்விஎலிப்பியுள்ளார்