Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.

அந்தவகையில், இன்று(18) மாத்தளை,கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாவுல, விகமுவ, லக்கல-பல்லேகம, உடுதும்பறை மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,குறித்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மி.மீ இனை மேவியுள்ளதனால் மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து வீழ்ந்தல், கற் பாறை சரிவு, நிலவெட்டுச்சாய்வு இடிந்து வீழ்தல், தாழ்விறக்கம் என்பவற்றிற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் அவதானிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Robots to guide passengers at Oman airport

Mohamed Dilsad

PNB arrested 2 Bangladeshi nationals with 200kg heroin

Mohamed Dilsad

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

Mohamed Dilsad

Leave a Comment