(UTV|COLOMBO) – இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகஅதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக இன்று(19) அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வாரமும் அவர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்த நிலையில், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.