Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று(19) தமது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க உள்ளதாக ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவால் இதுவரை பெறப்பட்டுள்ள சாட்சி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும், தற்போதைய நிலைமை குறித்தும் இந்த இடைக்கால அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதுடன், எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிகாலம் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Sri Lanka’s Hajj pilgrim quota raised

Mohamed Dilsad

நியூசி.நீதி அமைச்சர் – பிரதமர் இடையே சந்திப்பு

Mohamed Dilsad

கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…

Mohamed Dilsad

Leave a Comment