Trending News

பாட்டளி சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று(19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின்படி முன்னாள் அமைச்சர் நேற்று(18) கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Mohamed Dilsad

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்

Mohamed Dilsad

Indonesian woman held captive in cave for 15-years

Mohamed Dilsad

Leave a Comment