(UTVNEWS | COLOMBO) – பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில் ‘ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று உயரமாக இருக்கும். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது ‘ என தெரிவித்துள்ளார்.