(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் மற்றும் வலப்பனை பிரதேசதத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசத்திலும் மாத்தளை மாவட்டதில் வில்கமுவ, லக்கல, பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கும் நாவல பிரதேசத்திற்கும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.