(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் கூறினார்.
மேலும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய பிழையாகும். இது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரும் தடையாகும்.
ஜனாதிபதியாக தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் உச்சபட்சமாக நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர் எனவும் கூறினார்.
தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த இரண்டு குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே தனது எதிர்பார்ப்பாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.