Trending News

பாகிஸ்தானை 191 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது இலங்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணியின் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்பதற்கு அமைய அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக சான் மசூட் மற்றும் ஆபிட் அலி இருவரும் களமிறங்கி பாகிஸ்தான் அணிக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தை வழங்குவார்கள் என்ற நிலையில் மசூட் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் அசார் அலி அவரும் வந்த வேகத்தில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க அவ்வணி ஒரு கட்டத்தில் ஓட்டம் பெற தடுமாறியது.பின்னர் பாபர் அசாம் இணைந்து ஆடிய வேளையில் அலி 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 60 ஓட்டங்களையும் ஆசாட் சபீக் 63 ஓட்டங்களையும் ஹரீஸ் சுகையில் 9 ஓட்டங்களையும் முகம்மட் றிஸ்வான் 4 ஓட்டங்களையும் யாஸீர் ஷா ஓட்டம் எதுவும் பெறாமலும் அப்பாஸ் ஓட்டம் எதுவும் பெறாமலும் சஹீன் ஷா அப்ரிடி 5 ஓட்டங்களுடனும் நசிம் ஷா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி 59.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டையும் இழந்து 191 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காக பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குமார 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும எம்புல்தெனிய 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் விஷ்வா பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இதேவேளை நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை குவித்துள்ளது.இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ 4 ஓட்டங்களுக்கு சஹீன் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும்.

Related posts

Contaminated bootleg alcohol kills at least 42 in Iran

Mohamed Dilsad

Mumbai Indians beat Chennai Super Kings in IPL Final

Mohamed Dilsad

Presidential Commission issues notices to Secretary to PM

Mohamed Dilsad

Leave a Comment