(UTV|COLOMBO) – சிறிய மோட்டார் (Light weight motor cycles) சைக்கிள்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் ஆலோசனைகளை மீறுவோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் வாகன பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கபில அபேநாயக தெரிவித்துள்ளார்.