Trending News

இந்திரஜித் குமார சுவாமி இன்றுடன் பதவி விலகுகிறார்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இதற்கான இராஜினாமாக் கடிதத்தினையும் அவர் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி சமர்ப்பித்துள்ளார்.

அவர் நேற்று மத்திய வங்கியின் அனைத்து பணியாளர்களையும் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவதற்கு அவர் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பதவியேற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்று, பல்கலைக்கழக கல்வியை முடித்த அவர், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி பெற்றார். அவர் 1974 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் ஒரு பணியாளர் அதிகாரியாக சேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் மத்திய வங்கி ஆளுநர் விருதினை அவர் பெற்றிருந்தமை விசேடம்ஷமாகும்.

Related posts

கலிபோர்னியா காட்டுத்தீ – 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு

Mohamed Dilsad

Recent fiscal policy reforms improve Sri Lanka’s economic outlook – World Bank

Mohamed Dilsad

Country in debt to forbearers for freedom- President

Mohamed Dilsad

Leave a Comment