(UTVNEWS | COLOMBO) -எதிர்வரும் அண்டுக்கான ஹஜ் குழுவின் தலைவராக பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மர்ஜான் பளீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை சிறப்பாக முன்னெடுத்து இலங்கை ஹாஜிகளுக்கு சிறப்பான சேவையை முன்னெடுக்கும் நோக்கில் பிரதமரினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் குழுவில் அஹ்கம் உவைஸ், நகீப் மௌலானா, அப்துல் ஸத்தார், அல்ஹாஜ் புவாத் ஆகியோரும் பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.