Trending News

காஸா யுத்த குற்றம் தொடர்பில் விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் முயற்சி

(UTVNEWS | COLOMBO) –மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் திருப்தியடைந்துள்ளேன் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் மூலம் நீதியை நிலை நாட்ட முடியாது என கருதுவதற்கான காரணங்கள் இல்லை என தலைமை வழக்கறிஞர் படு பென்சவுடா தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை இஸ்ரேல் உடனடியாக கண்டித்துள்ளது.

இதேவேளை இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பாலஸ்தீன அதிகாரசபை தாமதமின்றி விசாரணகைளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Related posts

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது

Mohamed Dilsad

Muslim Cultural Center opened

Mohamed Dilsad

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

Mohamed Dilsad

Leave a Comment