Trending News

நத்தார்தாத்தா வேடத்தில் கோலி [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – கொல்கத்தாவில் உள்ள அனாதை சிறுவர்கள் இல்லத்திற்கு நத்தார்தாத்தா வேடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி சென்று அங்குள்ளவர்களிற்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவொன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில் விராட்கோலி நத்தார் தாத்தா போன்று வேடமிட்டு சிறுவர்களை சந்திப்பதை பார்க்க முடிகின்றது.

முதலில் தன்னை யார் என காண்பிக்காமல் விராட்கோலி அங்குள்ள சிறுவர்களுடன் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர் அவர்களிடம் நீங்கள் விராட்கோலியை சந்திக்க விரும்புகின்றீர்களா என அவர் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் ஆம் என தெரிவித்ததும் தான் அணிந்திருந்த நத்தார் தாத்தா முகமூடியை கழற்றி விராட்கோலி தான் யார் என்பதைகாண்பித்துள்ளார்.

Related posts

A 24 hour water cut tomorrow

Mohamed Dilsad

මැතිවරණ පැමිණිලි 157ක්.

Editor O

Showery and windy conditions to continue

Mohamed Dilsad

Leave a Comment