Trending News

இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UTV|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 555 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் கராச்சி தேசிய விளையாட்டு நடைபெறுகிறது.

ஷான் மசூட், அபிட் அலி மற்றும் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சதங்களை பெற்றுள்ளனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ජංගම දුරකථන මිලදී ගන්නා අයට විශේෂ දැනුම්දීමක්

Editor O

Argentina to outline cuts aimed at stabilising Peso

Mohamed Dilsad

Stay Order preventing the arrest of Gotabaya Rajapaksa extended

Mohamed Dilsad

Leave a Comment