Trending News

மழையுடனான வானிலையில் இன்றும் மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)- நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றும் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்சில இடங்களில் 100 -150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் கண்டி, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

Lasith Malinga does not expect to play next year’s World Cup

Mohamed Dilsad

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலி

Mohamed Dilsad

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

Mohamed Dilsad

Leave a Comment