(UTV|COLOMBO)- சிறிய மோட்டார் (Light weight motor cycles) சைக்கிள்களை பதிவு செய்வது மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தும் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் குறித்த வாகனங்களை பயன்படுத்தும் வர்த்தகர்கள் பாதிக்கப்படும் கூடும் என கருதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் சிறிய பாரவூர்திகளுக்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளும் கட்டாய சட்டமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் எனினும் மக்களுக்கு அறிவுறுத்திய பின்னர் மீண்டும் அந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.