(UTV|COLOMBO) – பிச் ரெடிங் நிறுவனம் (Fitch Ratings) நாட்டின் எதிர்காலத் தொலைநோக்குத் தொடர்பில் எதிர்மறையான திருத்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது.
இந்த நிறுவனம் இலங்கையின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் பொருளாதார நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் தொடர்பிலான யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது அவசர அவசரமாக தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதுகாலத்திற்கு ஏற்ற செயற்பாடல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தரப்படுத்தல் தீர்மானத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளமை, நாட்டின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அரச நிதியாகும். இது தொடர்பிலான ஸ்திரத்தன்மைக்கு அப்பாலேயே இந்நிறுவனம் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.