Trending News

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுக்கு டிரம்ப் அழைப்பு

(UTV|COLOMBO) – அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் ‘பிரெக்ஸிட்’டை முன்னிலைப்படுத்தி அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி தனிப்பெரும்பான்மை அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து, போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகி உள்ளார்.

இந்தநிலையில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாகவும் அமெரிக்க பயணத்துக்கான திகதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

SLAF deploys helicopter to douse Kuliyapitiya fire

Mohamed Dilsad

හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී ලොහාන් රත්වත්තේ පළාත් පාලන මැතිවරණයට…?

Editor O

Grade 5 Scholarship results released [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment