(UTV|COLOMBO) – பண்டிகை காலத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சில பிரிவுகளை பயன்படுத்தும் பேரூந்து கட்டணமானது நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக பேக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை மற்றும் நீர்கொழும்புக்கும், காலி மற்றும் நீர்கொழும்புக்குமிடையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பேரூந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று பேக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நீர்கொழும்பிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பேரூந்துகளின் கட்டணமாக 700 ரூபா வசூலிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் 720 ரூபா வசூலிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.