(UTV|COLOMBO) – எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.