(UTV|COLOMBO ) – பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விஷேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இந்த விஷேட பேருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி. நீர்கொழும்பு, காலி உள்ளிட்ட சனத்தொகை அதிகமாக கூடும் நகரங்களுக்காக அதிகளவிலான பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, இன்று முதல் ஆரம்பமாகவுள்ள விஷேட ரயில் சேவைகள் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.