(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் சிரேஷ்ட வீரர்கள் உரிய வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தாமை இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.
டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-1 என்ற கோல் கணக்கில் இழந்த பின்னர் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு தலைவராக, நான் அந்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த போட்டியில் என்னால் அதிகம் செய்ய முடியவில்லை. எஞ்சி, சந்திமல், திக்வெல்ல, மெண்டிஸ் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவை புதியவை அல்ல. நான் இப்போது 30 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு தலைவராக, நான் அந்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த போட்டியில் என்னால் அதிகம் செய்ய முடியவில்லை. எஞ்சி, சந்திமல், திக்வெல்ல, மெண்டிஸ் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவை புதியவை அல்ல. நான் இப்போது 30 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
பந்து வீச்சில் லஹிரு குமார சிறப்பாக செயற்பட்டார். அவருக்கு பந்து வீசுவதற்கு அழைத்த போதெல்லாம் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் பங்கு கொள்ளும் போது அணி சிறந்த இடத்தில் இருந்தது.
இரண்டாவது இனிங்ஸ் நாங்கள் பந்து வீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் மோசமாக செயற்பட்டோம்.
பழைய பந்தைக் கொண்டு பந்து வீசுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”என தெரிவித்தார்.