Trending News

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO ) – அதிகூடிய விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் கிடைக்க பெற்று வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்றைய தினம் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளபப்ட்ட சுற்றி வளைப்புக்களில் 15 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

சம்பா மற்றும் நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என அரசாங்கம் அண்மையில் விலை நிர்ணயித்திருந்தது.

எனினும், அதிகூடிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலை உயர்வு குறித்து அமைச்சர் ராஜித

Mohamed Dilsad

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

Mohamed Dilsad

International Food and Agriculture Forum begins today

Mohamed Dilsad

Leave a Comment